Saturday, March 29, 2008

தூண்டில் - திரை விமர்சனம்























பாச
சங்கிலிகள்

சிவகங்கை பக்கத்தில் ஒரு கிராமத்தில் பெரிய Bank-ல் சிவகுமார் மேனேஜராக வேலை பார்க்க, அவருடைய புது மனைவி லக்ஷ்மியுடன் சந்தோஷமாக வாழ்கிறார். லக்ஷ்மிக்கு குழந்தை என்றால் கொள்ளை பிரியம். இந்நிலையில் ஒரு நாள் சிவகுமார் லக்ஷ்மி போய்க்கொண்டிருந்த ஸ்கூட்டர் விபத்தாக, லக்ஷ்மிக்கு மனநிலை பாதிக்கப்பட்டு amnesiaவில் போய்விடுகிறார். அதிர்ஷ்டவசமாக சிவகுமார் தப்பித்து விடுகிறார். இந்நிலையில் சிவகுமார் வேலை விஷயமாக சென்னை வர அங்கே நடிகை ஸ்ரீப்ரியாவை சந்திக்கிறார். அவர்களுக்குள் எதிர்பாராதவிதமாக காதல் முளைக்க ஸ்ரீப்ரியா கர்பமாகிறார். தன் தாய்மாமன் சிவச்சந்தரனுக்கு பயந்து, டாக்டர் விஜயகுமாரியின் உதவியோடு, ரகசியமாக குழந்தையை பெற்று அதை சிவகுமாரிடம் குடுத்துவிடுகிறார். இதற்குள் லக்ஷ்மி குணமடைய சிவகுமார் லக்ஷ்மியிடம் தங்களுக்கு குழந்தை பிறந்ததாக கூறிவிடுகிறார். இதற்குள் தன் தாய்மாமனின் அக்கிரமத்தை தாங்கமுடியாமல் ஸ்ரீப்ரியா அவரை விட்டு பிரிந்து வந்து தன் குழந்தையை லக்ஷ்மியிடமிரிந்து பிரித்துவிடுகிறார்.

துன்பம் தாங்கமுடியாமல் சிவகுமார் லக்ஷ்மி திரும்ப சிவகங்கை போக தீர்மானிக்கிறார்கள். டாக்டர் விஜயகுமாரி ஸ்ரீப்ரியாவிடம் உணர்ச்சி வசனம் பேசி அவர் தப்பை உணர்த்துகிறார். தன் தாய்மாமன் சிவச்சந்தரன் மீண்டும் தொல்லை குடுக்க, எதிர்பாராதவிதமாக ஸ்ரீப்ரியா சிவச்சந்தரனை கொன்றுவிடுகிறார். சிவகுமார் லக்ஷ்மி செல்லும் சிவகங்கை train கிளம்ப, சங்கிலியை இழுத்து train-ஐ நிறுத்தி குழந்தையை குடுத்துவிட்டு ஸ்ரீப்ரியா ஜெயிலுக்கு செல்கிறார்.

1982-ல் அதியமான் இப்படி ஒரு கதையை எழுத தயாரிப்பாளர்கள் யாரும் முன் வராததால் காத்திருந்து காத்திருந்து 2007-ல் கிடைத்த ஏமாளி தயாரிப்பாளர் ஒருவரிடம் இந்த கதையை சொல்ல அவரும் படத்தை எடுக்க ஒற்றுக்கொள்ள, அதியமான் கதையை காலத்திற்கு ஏற்ப சற்றே மற்ற முடிவு செய்தார்.
மாற்றங்கள்:
பாச சங்கிலிகள் - தூண்டில்
சிவகுமார் - ஷாம்
லக்ஷ்மி - சந்தியா
ஸ்ரீப்ரியா - பெயர் தெரியாத ஒரு ......
விஜயகுமாரி - ரேவதி
சிவச்சந்தரன் - பெயர் தெரியாத ஒரு வெட்டி வில்லன்
ஸ்கூட்டர் - BMW Convertible
Amnesia - Egg Transplant
சென்னை - லண்டன்
climax-ல் வரும் train - airplane & airport
climax-ல் வரும் train சங்கிலி - airport runway

புதிதாக சேர்த்த item-கள்:
விவேக் காமெடி - சூப்பர் (படம் வெட்டி, அதனால்தான் என்று நினைக்கிறேன்)
Camera & Editing - Really Super!!

தூண்டில் - மாட்டிக்கிட்டது நாம.


- ?????

3 comments:

(Mis)Chief Editor said...

very apt one:-)

should have avoided 'sappai pigaru'...

madras maverick said...

Super Review.

madras maverick said...

Super Review.

 

© 2010Dhoda! | by Shankar