Friday, April 4, 2008

அஞ்சாதே - திரை விமர்சனம்

அஞ்சாதே

சமீபத்தில் அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் பார்த்த சில படங்களில் ஒரு படம் "அஞ்சாதே" . எதிர்பார்த்ததை விட அதிகம் impress செய்த படம் இது.


தமிழ் சினிமாக்களில் போலீஸ்காரர்கள் படம் என்றாலே, ஹீரோ வருவார், நாலு பேர் சல்யூட் அடிப்பார்கள், சட்டை கசங்காமல் எதிரிகளை பந்தாடுவார். அப்படித்தான் தன்னுடைய Inspector வாழ்க்கை இருக்கும் என்று நினைத்துக்கொண்டு நரேன் போலீஸ் ஸ்டேஷன் நுழைய, யாருமே
கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஒரு புதுமை, அதை விட புதுமை ஹீரோ சந்திக்கும் முதல் கேஸ் - ஒரு கட்டை பையில் ஒரு தலையை கொண்டு வரும் மனிதனும் அதை அடுத்து வரும் காட்சிகளும்.


பாண்டியராஜன் மற்றும் பிரசன்னாவின் காரெக்டர்கள் பெரிய surprise. இப்படி ஒரு வில்லன் காரெக்டருக்கு ஒத்துக்கொண்டு நடித்த பிரசன்னாவின் தைரியத்திற்கு பெரிய பாராட்டு (அந்த wig-ஐ தவிர்த்திருக்கலாம்).

படத்தில் ஆங்காங்கே வரும் கேமரா angle-கள் வித்தியாசம். குறிப்பாக, வெறும் கால்களை மட்டுமே காட்டி, கடைசியில் வில்லனின் சின்ன புத்தியை காட்டும் இடம் பிரமாதம்.


பெரிய நட்சத்திர பட்டாளம், முன்னணி/கவர்ச்சி நாயகி, அதிக செலவில் foreign பிரம்மாண்டம், ஹீரோயிசம், தாதயிசம் இப்படி எதுவும் இல்லாமல், வெறும் வேகமான திரைக்கதை, யதார்த்தமான காட்சி அமைப்பு வைத்து ஒரு நல்ல, விறுவிறுப்பான க்ரைம் ஆக்க்ஷன் படத்தை எடுத்திருக்கும் டைரக்டர் மிஷ்கின்னுக்கு ஒரு பெரிய சபாஷ்.

Don't miss it!!


4 STARS

0 comments:

 

© 2010Dhoda! | by Shankar