Sunday, June 22, 2008

அறை எண் 305-ல்....குருவி

டைரக்டர் - டாக்டர் சார்... ஒரு நல்ல கதை இருக்கு, கேக்கரீங்களா?
டாக்டர் - நான் சூப்பர் ஹீரோதானே?
டைரக்டர் - கண்டிப்பா, நீங்கதான் கடவுள்..
டாக்டர் - ஓகே, படம் பேரு என்ன?
டைரக்டர் - அறை எண் 305-ல்....குருவி.
டாக்டர் - intro சீன் எப்படி?
டைரக்டர் - வானத்துலேர்ந்து குருவியா பறந்து வரீங்க.. land ஆகறதுக்கு முன்னாடி ரெண்டு ரெக்கையும் ஒடஞ்சு கீழே விழுந்துடுது, அப்ப நீங்க ரெண்டு கையையும் நீட்டி, தலையை ஆட்டி, காதலுக்கு மரியாதை ஸ்டைல்ல land ஆகரீங்க.
டாக்டர் - பன்ச் dialog?
டைரக்டர் - ரெண்டு கை இருக்கும் போது, குருவிக்கு எதுக்குடா ரெக்கை ?
கடவுளா வந்தாலும், போடுவாண்டா குருவி மொக்கை.
டாக்டர் - கடவுளா வந்தாலும் சில யதார்த்தமான சீன்ஸ் வேணுமே?
டைரக்டர் - இருக்கு சார், படத்துல நீங்க London-ஐ clean பண்ணறீங்க.
டாக்டர் - போன மாசம் இங்கிலாந்து போயிருந்தேன் லண்டன் கிளீனா தான் இருக்கு, புதுசா ஏதாவது சொல்லுயா.
டைரக்டர் - நான் சொல்லறது நம்ம ஊரு லண்டன், toilet.
டாக்டர் - என்ன வெளயாடுரியா, வேற ஏதாவது சொல்லு.
டைரக்டர் - கொசு மருந்து அடிச்சு 2000 கொசு சாக போவுது அது உங்களுக்கு முன்னாடியே தெரியுது.
டாக்டர் - நான் இருக்கும்போது கொசுகூட சாவாது, கொசு மருந்த வாயால அப்படியே உரியறேன், திரும்பி வேற பக்கம் ஊதறேன், அங்க வில்லன் மயக்கம் போட்டு விழறான், எப்படி? கிளைமாக்ஸ் சீன் சொல்லு.

டைரக்டர் - ரெண்டு aeroplane நடு வானத்துல பறக்குது நீங்க ஒரு விமானத்துல இருக்கீங்க, இன்னொரு விமானத்துல வில்லன் உங்க அம்மா, ஹீரோயின், தங்கச்சி, இந்த விமானத்துல இருந்து அந்த விமானத்துக்கு பறந்து போயி ஒரு bomb போட்டுட்டு, உங்க அம்மா, ஹீரோயின், தங்கச்சி மூணு பேரையும் உப்பு மூட்ட தூக்கிட்டு உங்க விமானத்துக்கே வந்துடறீங்க.
டாக்டர் - இது கொஞ்சம் பரவாயில்ல. நீங்க போயி என்னோட மத்த படத்த பாத்து இன்னும் நல்ல மசாலாவா கதை பண்ணிட்டுவாங்க intro and climax அப்படியே வெச்சுக்கலாம்.

டைரக்டர் நொந்துபோய் வானத்தை பார்த்து "அட கடவுளே " என்று கூற
டாக்டர் - என்னய்யா கூப்பிட்டியா?
டைரக்டர் - என்ன சார் சொல்லறீங்க?
டாக்டர் - ஆமாயா கடவுள் கதையா கேட்டு அந்த characterஆவே மாறிட்டேன்.
டைரக்டர் - ?????

அறை 305-ல் கடவுள் - கடவுள் கூட ஒரு யதார்த்தமான மனிதனாய் வந்து அசத்தும் low budget அற்புதம்.

குருவி - சாதாரண மனிதன் கடவுளே மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு போலி சாகசம் காட்டும் high budget அபத்தம்.

2 comments:

(Mis)Chief Editor said...

man...you made it!!!

one line vimarsanam for these two movies is nothing but 'nach' :-))

Harish said...

Shankar..

Checking out ur blog after a long time. Excellent Spoof!!. Ending dhaan Top!

 

© 2010Dhoda! | by Shankar